Our Mission Statement
செம்மொழி தமிழ்ப் பள்ளியின் வளையதள பக்கத்திற்கு வருகைதந்தமைக்கு எங்கள் முதல் வணக்கம் .
நமது தாயக மண்ணை விட்டு, தமிழ் இனம் இன்று உலகம் முழுதும் படர்ந்து வாழும் சூழலில் , எங்கே நம் சந்ததியோடு உலகின் தலைச்சிறந்த , முதன்மை மொழியான தமிழ் மொழியும் மறைந்து விடுமோ என்ற அச்சத்தில் ஏங்காத தமிழர் யாரும் இல்லை என்றே கூறலாம் .
அடுத்த தலைமுறைக்கு நம் தமிழ் மொழியையும் தமிழ் கலாச்சாரத்தையும் கொண்டு செல்லும் பொறுப்பு , ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமையாகும் .
“ தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை அதன் தொடர்ச்சியில் உள்ளது “ என்ற கூற்றிற்கு இணங்க மான்செஸ்டர் வாழ் தமிழர்களாகிய நாங்கள் , இங்கு வளரும் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுத்தர உறுதி பூண்டோம் .
2016 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் அதற்கான களப்பணியை துவங்கி பெற்றோருடன் , கலந்தாலோசித்து , பின் 06/01/2017 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை எங்கள் முதல் வகுப்பை துவங்கினோம்.
முதல் ஆறு மாதங்கள் எங்களிடையே இருந்த வளங்களை வைத்தே பாடம் பயிற்றுவித்தோம் . பிறகு உலகத்தமிழ் கல்விக்கழகத்தோடு கூட்டு சேர்ந்து உரிய சந்தாவை செலுத்தி அவர்ககளின் பாட திட்டத்தை தற்போது பயில்விக்கின்றோம் .
நாற்பத்தியைந்து குழந்தைகளுடன் தொடங்கிய பள்ளி தற்போது எழுபத்தியெட்டு மாணவச்செல்வங்களை கொண்டுள்ளது . இது ஒரு கூட்டு முயற்சி. செம்மொழி தமிழ் பள்ளி சிறப்பாக செயல் பட உறுதுணையாக இருக்கும் அத்துணை தன்னார்வலர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி .
“தமிழ் விதைப்போம் தமிழ் வளர்ப்போம் “ என்பதே எங்கள் பள்ளியின் குறிக்கோள் . தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதே தமிழ் அன்னைக்கு நாங்கள் செய்யும் சமர்ப்பணமாகும்.
வாழிய நற்றமிழ்
வாழிய பாரதம்
ஓங்குக ஒற்றுமை
செழிக்கட்டும் சமத்துவம்.
இங்கனம் ,
“விதை ஒரு நாள் விருட்சமாகும் “என்ற நம்பிக்கையுடன் வழி நடத்தும் செம்மொழி தமிழ்ப் பள்ளி அறங்காவலர்கள் .
Objectives
- To promote Tamil as a language among the children in our community,who are of either Tamil origin or otherwise.
- To conduct Tamil language classes for children who are interested in learning the language and help them to read,write and speak in Tamil.
- By promoting Tamil language in our local community, we preserve the culture and heritage of Tamil speaking people.
- To support children who want to pursue further learning of Tamil language and support organisations that provide opportunities to those aspiring children.